service quota msg by state joint Secretary 28feb18
Share via 
Updated: May 04 2018 05:11 AM.
🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄
Friends try to understand this.These people are saying that they have sacrificed everything for their pg preparation.And say they are going to serve the society and we people are selfish.This is how our public health system has been degraded. |
They are questioning our service.Its high time we fight for right in a united manner.Let us not think that we are safe because our district had been included in the incentives list.It is only temporary.It may change anytime.Only permanent solution is regaining our 50% service quota.It is the only way to maintain our dignity in front of these people who say MBBS is enough for PHC.These people want to study in Government Medical Colleges which are run by specialists who are service doctors.But these non service doctors criticise us as selfish.Let us show to them that we stand together for our rights and fight till the end.Show this by contributing Rs.5000 for our legal fight and participating in full mass in our protest in Chennai on 5th March(Monday).
State Joint Secretary,
Tirunelveli zonal TNMOA.
‼‼‼‼‼‼‼‼‼‼‼
Share via 
Updated: February 22 2021 01:31 PM.
*TNMOA STATE*
*முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நமது தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் TNMOA உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி அதன்பலனாக கிடைக்கப்பெற்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசிடம் கோரியிருந்தோம்.*
*மதிப்பிற்குரிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அவர்கள்*
*Speciality (MD/MS) and superspeciality (MCh/DM) படிப்புகளுக்கு வரும் ஆண்டிலேயே இட ஒதுக்கீட்டை* *நடைமுறைப்படுத்தும்படியான அரசாணையை (G.O 462, 463) ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டார்கள்.*
*எனினும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இந்த அரசாணைகள் மட்டும் போதாதெனவும்,.....
Updated: April 08 2020 05:48 PM.
🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில அவசரச்செய்தி:
08.04.2020, புதன்கிழமை
இரவு 10.00 மணி
*1. உரிய ஊதியம் கேட்டு போராட்டம் நடத்திய மருத்துவர்களில், 118 பேர் பணிமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு முறை கோரிக்கை வைத்தும், இதுவரை அப்பணிமாற்றங்கள் திரும்ப பெறாமல் இருப்பது மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிமாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள இச்சங்கம் வலியுறுத்துகிறது.*
*2. உரிய ஊதிய போராட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவர்களுக்கு "வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் இல்லை" என்ற விதியின் அடிப்படையில் ஏழு நாள் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டு, அது பணி பதிவேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கையால் அம்மருத்துவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, அந்த ஏழு நாட்களை தற்காலிக விடுப்பாகவோ(Casual leave) அல்லது ஈட்டிய விடுப்பாகவோ (Earned leave) கருதி அதற்கான உரிய ஆணையை வழங்க வேண்டுமென இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*
*3. தற்போது அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக மூன்று லேயர் முகக்கவசம் வழங்கப்படுகிறது. இது எவ்விதத்திலும் பாதுகாப்பை தராதென மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கன்றனர். எனவே, புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகள், கொரோனா தடுப்பு பணியில் களப்பணியாற்றும் மருத்துவர்களுக்கு N95 பாதுகாப்பு கவசத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் சென்னையிலேயே சில மருத்துவ கல்லூரிகளில் N95 முகக்கவசம் தட்டுப்பாடு இருப்பது இச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்நிலையில், ஒவ்வொரு சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பும் மிகமிக அவசியமானது. எனவே இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இச்சங்கம் வலியுறுத்துகிறது.*
*4. மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு உரிய ஓய்வும், கொரோனா தொற்றை குறைக்க குறிப்பிட்ட எண்ணிகைகையிலானவர்களை தனிமைப்படுத்தலும் அவசியமாகும். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான விதிகள் பின்பற்றப்படுகிறது. ஒரே மாதிரியான விதிகளை பின்பற்ற வேண்டுமென இச்சங்கம் வலியுறுத்துகிறது.*
*5. கொரோனா சிகிச்சை பகுதியில் பணியாற்றுவது, களப்பணி மேற்கொள்வது இரண்டுமே ஆபத்தான பணிகளாகும். அசம்பாவிதங்கள் ஏற்படும் போது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது. இதை தடுக்க, உரிய பாதுகாப்பு வழங்குமாறு இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. கொரோனா தனிமை பிரிவுகளில் கட்டாயம் பாதுகாப்பு தர வேண்டுமென இச்சங்கம் கோருகிறது.*
*6. மருத்துவ குடும்பங்களுக்கும், பிறருக்கும் கொரோனா நோய் பரவுவதை தவிர்க்கும் பொருட்டு, கொரோனா மருத்துவ பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தருமாறு இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*
*7. கொரோனா வைரஸ் நீர்த்திவளை மூலம் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் சுகாதார பணியாளர்களுக்கு பரவுவதை தடுக்க அனைத்து மருத்துவ உபகரங்களையும் பயன்படுத்திய உடன் சுத்தம் செய்ய போதுமான தூய்மை பணியாளர்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*
நன்றி.
‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️.....
Updated: April 06 2020 02:50 PM.
.....
Updated: March 28 2020 07:58 PM.
.....
Updated: March 28 2020 10:21 AM.
🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில செய்தி:
28.03.2020, சனிக்கிழமை
மதியம் 01.30 மணி
*மருத்துவ அலுவலர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு-தொடர்பாக*
*கொரோனா தொற்றால் உலகமே தற்போது பேரிழப்பை சந்தித்து வருகிறது. இதில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் வாயிலாக சமூகத்திற்கு பரவும் அபாயமும் உண்டாகியுள்ளது. நேற்றைய தரவுகளின் படி, இத்தாலி நாட்டில் மட்டும் சுமார் 6000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், இதில் பெருமளவு மருத்துவ பணியாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் நடைபெறாமல் இருக்க, பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:*
*1. மருத்துவர்கள் அனைவரும் தத்தம் புற நோயாளிகள் பிரிவில் இரண்டு மீட்டர் இடைவெளியில் (social distancing) நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை அனைத்து மருத்துவ நிலையங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென உறுப்பினர்களை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் புறநோயாளிகள் பகுதியில் குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசமும், நோயாளியை பரிசோதிக்கும் சூழல் ஏற்பட்டால் கையுறை அணிந்தும் தங்களது பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.*
*2. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் குறித்த தெளிவான வழிமுறையை(Protocol) உடனடியாக வழங்கவும், அதற்கேற்றவாறுj பாதுகாப்பு கவசங்களை தடையின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் வழங்கவும் உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எடுக்குமாறு தமிழக அரசை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*
*3. கொரோனா தடுப்பு பணிகளை தடையின்றி மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு சுகாதார வட்டாரத்திற்கும் ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*
*இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவ்வபோது உறுப்பினர்களின் கவனத்திற்கு இச்சங்கம் கொண்டுவரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறது.*
நன்றி.
‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️.....
Updated: May 04 2018 05:11 AM.
🌸🌸🌸🌸🌸🌸🌸
Tamil nadu Medical PG admissions - incentive mark - Dr. Umanath committee reports. 26.02.2018.
Abstract prepared by
Dr. K. MURUGESAN
909 229 1919
Views expressed are personal, not intended to support or appose any party concerned.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸.....
Updated: May 04 2018 05:11 AM.
🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄
2.3.18
A short GBM was held at
Madhanur CHC today.
50% Service Quota!
What's till now, what next.
Importance of legal & field protest was discussed.

.....
Updated: May 04 2018 05:11 AM.
🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநிலச்செய்தி:
28/02/2018, புதன்கிழமை
மதியம் 01.00 மணி
*முதுநிலை மருத்துவ பட்டபடிப்பில், அரசு மருத்துவர்களுக்கு மேக்ஸிமம் இன்சென்டிவ் மார்க் 15 சதவீதமாக குறைக்க வாய்ப்பு?*
*ஏற்கனவே எம்.சி.ஐ விதியின் படி, வருடத்திற்கு பத்து சதவீதம் வீதம் முப்பது சதவீதம் அதிகபட்ச இன்சென்டிவ் மதிப்பெண் வழங்கப்பட்டது. தற்போது மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரையில் நேரடியாக இன்சென்டிவ் மதிப்பெண்களை குறிப்பிடாமல் சதவீதத்தில் மட்டுமே சூசகமாக தெரிவித்திருப்பது, இன்சென்டிவ் மதிப்பெண்ணை குறைப்பதற்கு வாய்ப்பிருக்கிறதோ என மேன்மேலும் சந்தேகத்தை கூட்டுகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசு சார்பாக கடிதம் எழுதப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.*
நன்றி.
‼‼‼‼‼‼‼‼‼‼‼.....
Updated: May 04 2018 05:11 AM.
🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநிலச்செய்தி:
27/02/2018, செவ்வாய்க்கிழமை
காலை 08.30 மணி
*மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரைகளை புறகணிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!*

*நேற்று(26/02/2018) முதுநிலை மருத்துவ பட்டபடிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரைகள் வெளியாகியிருந்தது. அக்கமிட்டி பரிந்துரைகளின் வரவேற்கதக்க ஒரே .....
Updated: May 04 2018 05:11 AM.
🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க திருவண்ணாமலை சுகாதார மாவட்டச்செய்தி:
28/02/2018, புதன்கிழமை
மாலை 07.00 மணி
*கண்டனச்செய்தி😡😡😡*
*போலி மருத்துவர்களை ஒழிப்பதற்கு காவல்துறையினரின் உதவியோடு மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைமுறைபடுத்த ஏற்கனவே பல்வேறு வழிமுறைகள் இருப்பினும், இரவு நேரங்களில் நடமாடும் மருத்துவ.....
[ View all news scrolls ]