Welcome to official webpage of TNMOA - Tamilnadu Medical Officers Association

[ View all news scrolls ]

TNMOA is against umanath committee recommendations 27feb2018




Share via


Updated: March 04 2018 09:54 AM.


🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநிலச்செய்தி:

27/02/2018, செவ்வாய்க்கிழமை
காலை 08.30 மணி

*மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரைகளை புறகணிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!*|

*நேற்று(26/02/2018) முதுநிலை மருத்துவ பட்டபடிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரைகள் வெளியாகியிருந்தது. அக்கமிட்டி பரிந்துரைகளின் வரவேற்கதக்க ஒரே அம்சம், தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளை பாதுகாக்க ஒரே தீர்வு ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே எனவும், அதை இந்த கமிட்டி வலுவாக பரிந்துரைப்பதாகவும் குறிப்பிடபட்டிருந்தது. அது தவிர எம்.சி.ஐ விதிப்படி சிறப்பு மதிப்பெண்கள் கொடுத்திருப்பதாக கூறி, தமிழ்நாடு முழுக்க உள்ள அரசு மருத்துவர்களுள் பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு இருந்த போது, குறைந்த பட்சம் ஐந்து பட்டபடிப்பு ரேடியாலஜி இடங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வருடாவருடம் கிடைத்து வந்தது. தற்போது ஒரு ரேடியாலஜி இடம் கூட கிடைக்காது என்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படியே போனால் வட மாநிலங்களில் நடப்பது போல இங்கும் அரசு மருத்துவமனைகள் ஏலத்திற்கு விடப்படுமோ என்ற அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சிறப்பு மதிப்பெண்கள் என்ற பெயரில் தமிழகத்தின் மிகச் சிறந்த சுகாதார கொள்கையே பந்தாடப்பட்டு, கேள்விகுறியாக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து போராடுவதை விட்டுவிட்டு, எம்.சி.ஐ-யின் விதிகளை அப்படியே பின்பற்றுவது நம் மாநில சுகாதார கொள்கையை நாமே குழி தோண்டி புதைப்பது போலாகிவிடும். எனவே தமிழக அரசு மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் முனைப்பு காட்டுவதை விடுத்து, மத்திய அரசிடமும், எம்.சி.ஐ-யிடமும் வாதாடி நாம் இழந்த மாநில உரிமைகளை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுத்து, ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீட்டை மீட்க ஆவன செய்யுமாறு இச்சங்கம் வலியுறுத்துகிறது. பெருவாரியான தமிழக மக்கள் பயன்பெறும் அரசு மருத்துவமனைகளுக்கு கேடு விளைவிக்கும் எம்.சி.ஐ விதிகளில் மாற்றம் கொண்டு வர, அரசு மருத்துவமனைகளுக்கான ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீட்டை மீட்க சங்கத்தின் அடுத்தகட்ட அவசர நடவடிக்கைகளை மாநில செயற்குழு விவாதித்து இன்று மாலை அறிவிக்கும் என்பதையும் அரசின் கவனத்திற்கு இச்சங்கம் கொண்டு வருகிறது.*

நன்றி.

‼‼‼‼‼‼‼‼‼‼‼



🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

MESSAGE FROM TNMOA, STATE:

27/02/2018, Tuesday
Morning 10.00 AM

*The TN govt has released the Dr.Umanath committee's report on incentivisation of in-service doctors for post graduation medical admission. Apart from the mentioning of 50% reservation for govt docs is the best solution", there is nothing appreciable or acceptable in the report.*

*Instead of reinstating the old system or fighting to restore it back, the government has simply decided to go with the MCI rules, which are in no way justice to the serving doctors as well as the public health system.*

*TNMOA strongly opposes the government in adopting the Dr. Umanath committee report on incentivisation of in-service doctors, doing so the govt has pushed it's doctors into a tornado of chaos and has let down the state's health system which has been exceptionally well functioning and been a model system for all states. Now the Govt in doing something so obviously contradictory.*

*There has been no compartmentalisation of seats, as of now, a government doctor who served in the public health system for the cause of people's health care, can't aspire to take a good degree , let alone be satisfied with any random diploma. At this rate, the speciality doctors in TN will be an endangered category or even become extinct, left to the mercy of private sector, pushed to the edge to resort to private sector to take the role of saviours of health care and making healthcare unaffordable sooner than later.*

*TNMOA hence strongly registers it's disappointment with the government and the committee and insists the state Govt should do the needful to bring the amendment in MCI rules, and restore 50% in-service reservation and state rights, to save the public health system of the state.*

*TNMOA considers this situation as very serious and further course of action regarding the crisis will be announced by today evening, after a detailed discussion with our Executive committee of the association.*


Thank you.

‼‼‼‼‼‼‼‼‼‼‼


Share via


Other recent news scrolls: [ View all news scrolls ]

>> feb28 fogda dharna in chennai

Updated: February 22 2021 01:31 PM.

*TNMOA STATE*

*முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நமது தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் TNMOA உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி அதன்பலனாக கிடைக்கப்பெற்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசிடம் கோரியிருந்தோம்.*

*மதிப்பிற்குரிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அவர்கள்*
*Speciality (MD/MS) and superspeciality (MCh/DM) படிப்புகளுக்கு வரும் ஆண்டிலேயே இட ஒதுக்கீட்டை* *நடைமுறைப்படுத்தும்படியான அரசாணையை (G.O 462, 463) ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டார்கள்.*

*எனினும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இந்த அரசாணைகள் மட்டும் போதாதெனவும்,.....

>> tnmoa state news on corona activities and pay hike strike

Updated: April 08 2020 05:48 PM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில அவசரச்செய்தி:

08.04.2020, புதன்கிழமை
இரவு 10.00 மணி


*1. உரிய ஊதியம் கேட்டு போராட்டம் நடத்திய மருத்துவர்களில், 118 பேர் பணிமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு முறை கோரிக்கை வைத்தும், இதுவரை அப்பணிமாற்றங்கள் திரும்ப பெறாமல் இருப்பது மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிமாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள இச்சங்கம் வலியுறுத்துகிறது.*

*2. உரிய ஊதிய போராட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவர்களுக்கு "வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் இல்லை" என்ற விதியின் அடிப்படையில் ஏழு நாள் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டு, அது பணி பதிவேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கையால் அம்மருத்துவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, அந்த ஏழு நாட்களை தற்காலிக விடுப்பாகவோ(Casual leave) அல்லது ஈட்டிய விடுப்பாகவோ (Earned leave) கருதி அதற்கான உரிய ஆணையை வழங்க வேண்டுமென இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*

*3. தற்போது அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக மூன்று லேயர் முகக்கவசம் வழங்கப்படுகிறது. இது எவ்விதத்திலும் பாதுகாப்பை தராதென மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கன்றனர். எனவே, புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகள், கொரோனா தடுப்பு பணியில் களப்பணியாற்றும் மருத்துவர்களுக்கு N95 பாதுகாப்பு கவசத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் சென்னையிலேயே சில மருத்துவ கல்லூரிகளில் N95 முகக்கவசம் தட்டுப்பாடு இருப்பது இச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்நிலையில், ஒவ்வொரு சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பும் மிகமிக அவசியமானது. எனவே இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இச்சங்கம் வலியுறுத்துகிறது.*

*4. மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு உரிய ஓய்வும், கொரோனா தொற்றை குறைக்க குறிப்பிட்ட எண்ணிகைகையிலானவர்களை தனிமைப்படுத்தலும் அவசியமாகும். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான விதிகள் பின்பற்றப்படுகிறது. ஒரே மாதிரியான விதிகளை பின்பற்ற வேண்டுமென இச்சங்கம் வலியுறுத்துகிறது.*

*5. கொரோனா சிகிச்சை பகுதியில் பணியாற்றுவது, களப்பணி மேற்கொள்வது இரண்டுமே ஆபத்தான பணிகளாகும். அசம்பாவிதங்கள் ஏற்படும் போது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது. இதை தடுக்க, உரிய பாதுகாப்பு வழங்குமாறு இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. கொரோனா தனிமை பிரிவுகளில் கட்டாயம் பாதுகாப்பு தர வேண்டுமென இச்சங்கம் கோருகிறது.*

*6. மருத்துவ குடும்பங்களுக்கும், பிறருக்கும் கொரோனா நோய் பரவுவதை தவிர்க்கும் பொருட்டு, கொரோனா மருத்துவ பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தருமாறு இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*

*7. கொரோனா வைரஸ் நீர்த்திவளை மூலம் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் சுகாதார பணியாளர்களுக்கு பரவுவதை தடுக்க அனைத்து மருத்துவ உபகரங்களையும் பயன்படுத்திய உடன் சுத்தம் செய்ய போதுமான தூய்மை பணியாளர்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*

நன்றி.

‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️.....

>> 118 MOs appeal to govt on reverting transfer

Updated: April 06 2020 02:50 PM.


.....

>> TNMOA letter to revoke strike transfers and strike period regularisation

Updated: March 28 2020 07:58 PM.




.....

>> Drs and health worker safety in corona duty TNMOA

Updated: March 28 2020 10:21 AM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில செய்தி:

28.03.2020, சனிக்கிழமை
மதியம் 01.30 மணி

*மருத்துவ அலுவலர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பு-தொடர்பாக*

*கொரோனா தொற்றால் உலகமே தற்போது பேரிழப்பை சந்தித்து வருகிறது. இதில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் வாயிலாக சமூகத்திற்கு பரவும் அபாயமும் உண்டாகியுள்ளது. நேற்றைய தரவுகளின் படி, இத்தாலி நாட்டில் மட்டும் சுமார் 6000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், இதில் பெருமளவு மருத்துவ பணியாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் நடைபெறாமல் இருக்க, பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:*

*1. மருத்துவர்கள் அனைவரும் தத்தம் புற நோயாளிகள் பிரிவில் இரண்டு மீட்டர் இடைவெளியில் (social distancing) நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை அனைத்து மருத்துவ நிலையங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென உறுப்பினர்களை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் புறநோயாளிகள் பகுதியில் குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசமும், நோயாளியை பரிசோதிக்கும் சூழல் ஏற்பட்டால் கையுறை அணிந்தும் தங்களது பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.*

*2. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் குறித்த தெளிவான வழிமுறையை(Protocol) உடனடியாக வழங்கவும், அதற்கேற்றவாறுj பாதுகாப்பு கவசங்களை தடையின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் வழங்கவும் உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எடுக்குமாறு தமிழக அரசை இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*

*3. கொரோனா தடுப்பு பணிகளை தடையின்றி மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு சுகாதார வட்டாரத்திற்கும் ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.*

*இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவ்வபோது உறுப்பினர்களின் கவனத்திற்கு இச்சங்கம் கொண்டுவரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறது.*

நன்றி.

‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️.....

>> unanath committee recommendations overview 26feb18

Updated: May 04 2018 05:11 AM.

🌸🌸🌸🌸🌸🌸🌸

Tamil nadu Medical PG admissions - incentive mark - Dr. Umanath committee reports. 26.02.2018.

Abstract prepared by
Dr. K. MURUGESAN
909 229 1919

Views expressed are personal, not intended to support or appose any party concerned.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸.....

>> TNMOA tirupathur GBM held 1march18

Updated: May 04 2018 05:11 AM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

2.3.18

A short GBM was held at
Madhanur CHC today.

50% Service Quota!
What's till now, what next.

Importance of legal & field protest was discussed.




.....

>> TNMOA enquires about invective to govt 28feb18

Updated: May 04 2018 05:11 AM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநிலச்செய்தி:

28/02/2018, புதன்கிழமை
மதியம் 01.00 மணி

*முதுநிலை மருத்துவ பட்டபடிப்பில், அரசு மருத்துவர்களுக்கு மேக்ஸிமம் இன்சென்டிவ் மார்க் 15 சதவீதமாக குறைக்க வாய்ப்பு?*

*ஏற்கனவே எம்.சி.ஐ விதியின் படி, வருடத்திற்கு பத்து சதவீதம் வீதம் முப்பது சதவீதம் அதிகபட்ச இன்சென்டிவ் மதிப்பெண் வழங்கப்பட்டது. தற்போது மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரையில் நேரடியாக இன்சென்டிவ் மதிப்பெண்களை குறிப்பிடாமல் சதவீதத்தில் மட்டுமே சூசகமாக தெரிவித்திருப்பது, இன்சென்டிவ் மதிப்பெண்ணை குறைப்பதற்கு வாய்ப்பிருக்கிறதோ என மேன்மேலும் சந்தேகத்தை கூட்டுகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசு சார்பாக கடிதம் எழுதப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.*

நன்றி.

‼‼‼‼‼‼‼‼‼‼‼.....

>> TNMOA Codemns umanath committee recommendations 27feb18

Updated: May 04 2018 05:11 AM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநிலச்செய்தி:

27/02/2018, செவ்வாய்க்கிழமை
காலை 08.30 மணி

*மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரைகளை புறகணிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!*




*நேற்று(26/02/2018) முதுநிலை மருத்துவ பட்டபடிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மரு.உமாநாத் IAS கமிட்டியின் பரிந்துரைகள் வெளியாகியிருந்தது. அக்கமிட்டி பரிந்துரைகளின் வரவேற்கதக்க ஒரே .....

>> TNMOA codemns tiruvannamalai collector 28feb18

Updated: May 04 2018 05:11 AM.

🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄🀄

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க திருவண்ணாமலை சுகாதார மாவட்டச்செய்தி:

28/02/2018, புதன்கிழமை
மாலை 07.00 மணி

*கண்டனச்செய்தி😡😡😡*

*போலி மருத்துவர்களை ஒழிப்பதற்கு காவல்துறையினரின் உதவியோடு மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைமுறைபடுத்த ஏற்கனவே பல்வேறு வழிமுறைகள் இருப்பினும், இரவு நேரங்களில் நடமாடும் மருத்துவ.....

[ View all news scrolls ]